இருமனமுள்ளவன்
- படித்ததில் ஆசீர்வாதமானது
- Apr 12, 2018
- 1 min read

சலவைத் தொழிலாளி ஒருவன் ஆற்றங்கரையில் துணி துவைத்துக் கொண்டிருந்தானாம். ஏற்கனவே துவைத்த துணிகளில் சிலவற்றைக் காயவிட்டிருந்தான். திடீரென்று பலமான காற்று ஒன்று ஆரம்பித்தது. காற்றின் வேகம் அதிகரித்ததும் சலவைத்தொழிலாளி தண்ணீரிலிருந்து வெளியேறி, காய்ந்த சில துணிகளைக் சேகரிக்கச் சென்றானாம். தீடீரென்று கரையில் கட்டி வைத்திருந்த படகு நினைவிற்கு வர, காற்றின் அகோரத்தில் படகு அறுந்து தண்ணீரோடு போய்விடக்கூடாது என்று நினைத்து படகைப் பத்திரமாக கட்டி வைக்க அங்கு விரைந்தார்.
பாதி வழியில், காய்ந்து கொண்டிருந்த துணிகளில் மிகவும் விலைமதிப்பு மிக்க சில சேலைகள் இருப்பது நினைவிற்கு வர படகைவிட்டு விட்டு துணிகளைச் சேகரிக்க ஓடினான். அதற்குள் காற்றின் வேகம் அதிகரிக்க, சூறாவளிக்காற்றில் சிக்கின துணிகள் அனைத்தும் பறந்து போயினவாம். படகையாவது காப்பாற்றுவோம் என நினைத்து படகை நோக்கி ஓட கயிறு அறுந்து படகும் காற்றினால் அடிபட்டு தண்ணீரில் ஓடிவிட்டது.
இதுவும் வேண்டும், அதுவும் வேண்டும் இதையும் விட மனதில்லை. அதையும் விட மனதில்லை என்று இருமனதோடு வாழ்வது பரிதாபம் தான். அவர்கள் காற்றினால் அடிபட்டு அலைகின்ற கடலின் அலைக்கு ஒப்பானவர்களாம்.
இயேசுவும் வேண்டும் உலகமும் வேண்டும் என்பது முடியாத காரியம். உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் கொண்டுள்ள ஒருவனால் இயேசுவை உண்மையாக பின்பற்ற முடுயாது. இயேசுவைப பின்பற்றும் ஒருவன் உலக விஷயங்களை பற்றி நினைக்க கூடாது. எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது, ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை, அசட்டைபண்ணுவான். இதனையே இயேசு "தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது" (லூக்கா 16:13) என்றார். ஆண்டவர் மீது கொண்டுள்ள நம்பிக்கையில் உறுதியாய் நிலை நிற்போம். அந்த நம்பிக்கையே நம் வாழ்க்கையில் ஆசீரவாதங்களை கொண்டு வரும். இருமனம் குந்தி நடப்பதற்குச் சமமாம்.
"இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாய் இருக்கிறான்'' - யாக்கோபு 1:8.
அன்புக்குரியவர்களே! இருமனமுள்ளவர்களால் தேவனை ஒருபோதும் பிரியப்படுத்த முடியாது. தேவனை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளவும் முடியாது. மட்டுமல்ல; தேவனிடம் இருந்து எதையும் பெற்றுக்கொள்ளவும் முடியாது.
Comentários