நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய்
- Jb Yeshua
- Mar 21, 2020
- 2 min read

பெத்தானியா என்கிற ஒரு கிராமத்தில் ஒரு ஏழைக் குடும்பம் இருந்தது அந்த குடும்பத்தில் சகோதர சகோதரிகளாக "லாசரு" "மார்த்தாள்" "மரியாள்" என்கிற மூன்று பேர் இருந்தார்கள்
அந்த குடும்பத்தை இயேசு கிறிஸ்து மிகவும் அதிகமாக நேசித்தார் அவர்களும் அவரை தங்களுடைய தகப்பனாக ஏற்றுக் கொண்டிருந்தார்கள்
திடீரென்று லாசரு வியாதிப்பட்டு மரித்துப் போனான் அவனுடைய சகோதரிகள் அந்தச் செய்தியை இயேசு கிறிஸ்துவுக்கு சொல்லி அனுப்பினார்கள்
ஆனால் அவர் உடனே வரவில்லை லாசரு அடக்கம் பண்ணப்பட்டு 4 நாட்களுக்கு பிறகு தான் வந்தார்
மார்த்தாளும் மரியாளும் அவரைப் பார்த்தவுடனே நீர் இங்கே இருந்திருந்தால் லாசரு மரித்திருக்க மாட்டானே என்று சொல்லி அவருடைய பாதத்தில் விழுந்து அழுதார்கள்
அப்பொழுது அவர் அவன் உயிர்த்தெழுந்திருப்பான் என்று சொன்னார்
அதற்கு மார்த்தாள் உயிர்தெழுதலும் நடைபெறும் கடைசி நாளில் அவன் உயிரோடு எழுந்திருப்பான் என்பதை நான் அறிவேன் என்றுச் சொன்னாள்
அப்பொழுது இயேசு கிறிஸ்து அந்த கல்லறைக்கு அருகில் நின்று கொண்டு கல்லை புரட்டிப் போடுங்கள் என்று சொன்னபாேது
ஆண்டவரே அடக்கம் பண்ணப்பட்டு 4 நாட்கள் ஆகிவிட்டது இப்பொழுது சரீரம் அழுகி நாற்றம் எடுக்குமே என்று மார்த்தாள் சொன்னாள்
இயேசு அவளை பார்த்து நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை காண்பாய் என்று சொன்னார் அதாவது விசுவாசித்தால் அற்புதம் நடக்கும் என்பதாக இயேசு கிறிஸ்து சொன்னார்
நண்பர்களே மரித்துப் போய் அழுகி போன லாசருவினுடைய சரீரத்தை 4 நாட்கள் கழித்து இயேசு கிறிஸ்து உயிரோடு எழுப்பினார் என்பதாக பரிசுத்த வேதாகமத்தில் நாம் பார்க்கிறோம்
ஒரு வேளை இன்றைக்கு இந்த மாதிரி எல்லாம் நடக்குமா? என்று நீங்கள் கேட்கக் கூடும்
சில வருடங்களுக்கு முன்பு ரெய்னார்டு போங்கே என்கிற தேவ மனிதர் ஆப்பிரிக்கா தேசத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட பட்டணத்திற்கு ஊழியத்தின் நிமித்தமாக போயிருந்தார்
அந்த கூட்டம் நடைபெற இருந்த 3 நாட்களுக்கு முன்பு அங்கிருந்த ஒரு ஊழியக்காரர் மரித்துப் போனார்
டாக்டர்கள் அவர் இறந்து விட்டார் இனி அவரை அடக்கம் தான் செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டார்கள் ஆனால் அந்த ஊழியக்காரர் மனைவியின் உள்ளத்திற்குள் ஒரு விசுவாசம் இருந்தது
அவர்கள் ஜெபித்தபோது ஸ்திரீகள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடெழுந்திருக்கப் பெற்றார்கள் (எபரெயர் 11:35) என்கிற தேவ வசனம் அந்த சகோதரியோடு பேசியது
இன்னும் இரண்டு நாட்கள் கழித்து ரெய்னார்டு போங்கே அவர்கள் ஊழியத்திற்காக இங்கே வரும்போது என் கனவருடைய மரித்துப் போன சரீரத்தை மீண்டுமாக உயிரோடு எழுப்புவார் என் கணவரை திரும்பப் பெற்றுக் கொள்வேன் என்கிற விசுவாசத்தோடு தன் கணவருடைய மரித்துப்போன சரீரத்தை பிணத்தைப் பாதுகாக்கும் பெட்டிக்குள் வைத்திருந்தார்கள்
அந்த சகோதரியின் குடும்பத்தினரும் மற்ற எல்லாரும் இது என்ன பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது என்று சொல்லி அவர்களை எதிர்த்தார்கள் ஆனால் அந்த சகோதரியோ முழு இருதயத்தோடு கர்த்தரை விசுவாசித்தார்கள்
கூட்டம் நடைபெற்ற அன்றய தினம் அந்த சகோதரி தன் கணவருடைய சரீரத்தை ஒரு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு போனார்கள்
அங்கே திரள் கூட்ட ஜனங்கள் இருந்தபடியால் அவர்கள் உள்ளே போக முடியவில்லை அதுவும் ஒரு பிணத்தை கொண்டு வந்தால் யார் தான் உள்ளே விடுவார்கள்?
பிணத்தை கூட்டத்திற்குள் அனுமதிக்க முடியாது என்றும் சொல்லி விட்டார்கள் எவ்வளவோ போராடியும் அவர்களை உள்ளே விடவில்லை
அந்த சமயத்தில் அங்கிருந்த தன்னார்வத் தொண்டர்கள் அவர்கள் மீது இரக்கப்பட்டு இந்தக் கட்டிடத்தின் கீழ் மட்டத்தில் ஒரு இடம் இருக்கிறது வேண்டுமானால் அங்கே கொண்டு போய் வைத்து ஜெபம் பண்ணுங்கள் என்று சொன்னார்கள்
அந்த சகோதரியும் அப்படியே கொண்டுபோய் தன் கணவருடைய சரீரத்தை வைத்து ஜெபிக்க ஆரம்பித்தார்கள் அவர்களுடைய விசுவாச ஜெபத்தை பார்த்துக் கொண்டிருந்த அங்கிருந்த சிலரும் அவர்களோடு ஜெபிக்க ஆரம்பித்தார்கள்
சில மணி நேரங்கள் கடந்து போயிற்று திடீரென அந்த சரீரத்தில் உள்ள ஒரு கால் பெரு விரல் அசைய ஆரம்பித்து மரித்துப் போயிருந்த அந்த சரீரத்திற்குள் உயிர் வந்து விட்டது
இன்னும் விசுவாசத்தோடு அவர்கள் ஜெபிக்க ஆரம்பித்தார்கள் அதன் பிறகு கைகளும் கால்களும் அசைய ஆரம்பித்தன கொஞ்ச நேரத்தில் மரித்துப் போய் 3 நாட்கள் கழித்த அந்த சரீரத்திற்குள் ஜீவன் வந்து விட்டது அவர் உயிர் பெற்று எழும்பினார் இது ஆபபி்ரிக்கா தேசத்தில் நடந்த உண்மை சம்பவம்
அந்த அற்புதம் எப்படி நடந்தது செத்துப் போன என் கணவரை கர்த்தர் உயிரோடு எழுப்புவார் என்கிற அந்த சகோதரியின் விசுவாசம் தான் காரணம்
கர்த்தர் அவர்களுடைய அந்த விசுவாசத்தை கணப்படுத்தினார் இ்ன்றைக்கும் அதே விதமான அற்புதங்களை கர்த்தர் செய்கிறார் அப்படியானால் கர்த்தர் நம்மிடத்தில் எதிர்பார்க்கிற காரியம் என்ன விசுவாசம்
இன்றைக்கும் கர்த்தர் உங்களைப் பார்த்து சொல்கிறார்
நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் யோவான் 11:40 ஆமேன்
Comments