top of page

பாவ மன்னிப்பு கேட்போமா. ......????

  • படித்ததில் ஆசீர்வாதமானது
  • Jul 19, 2018
  • 1 min read

அமெரிக்காவில் ஒரு இளைஞனுக்கு கொலை குற்றத்திற்காக நீதிபதி தூக்குத்தண்டனையை கொடுத்தார். ஒரு குறிப்பிட்ட நாளில் இவனை தூக்கில் போடவேண்டும் என்று நாளையும் குறித்திருந்தார்.


இதனை அறிந்த ஊர் மக்கள் அந்த மாகாணத்தின் ஆளுநருக்கு கடிதம் எழுதினார்கள்.

சந்தர்ப்ப சூழ்நிலையில் அவன் இந்த கொலையை செய்ததாகவும் தெரிவித்தனர். மேலும் அவன் தாய்க்கு ஒரே மகன் என்பதால் அவனுக்கு சிறிய அளவில் தண்டனை கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொ‌ண்டன‌ர். ஆனால் ஆளுநர் இந்த மனுவை நிராகரித்தார். பல கடிதங்கள் எழுதினார்கள். அவன் தாய் எழுதினார் . எல்லா மனுக்களையும் ஆளுநர் நிராகரித்தார் .


தூக்கில் போடுவதற்க்கு ஒரு நாள் முன்பு ஒரு போதகர் அவனை பார்க்க சென்றார். அவனிடம் அவர் தம்பி நாளையுடன் உன் உலக வாழ்வு முடிவு பெறுகிறது . இப்போதும் உனக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. நீ செய்த பாவத்திற்காக இயேசுவிடம் மன்னிப்பு கேள் அவர் மன்னிக்க தயையுள்ளவராய் இருக்கிறார். உன் பாவத்தை அறிக்கை இடு என்றார்.


ஆனால் அவனோ நான் எதற்காக பாவ மன்னிப்பு கேட்க வேண்டும். இன்று மட்டும் தான் உயிருடன் இருக்க போகிறேன் . என் ஊர் மக்கள் மற்றும் என் தாய் எவ்வளவோ மனுக்களை ஆளுநருக்கு அனுப்பினார்கள். எந்த பயனும் இல்லை. நாளை நான் சாகபோகிறேன் நான் எதற்காகவும் பாவ மன்னிப்பு கேட்கமாட்டேன் என்றான்


உடனே போதகர் அவனிடம் ஆளுநர் கைவிட்டாலும் இயேசு கைவிடமாட்டார் இப்போது நீ பாவ மன்னிப்பு எடுத்தால் நாளை உனக்கு கிடைக்க இருக்கும் தூக்குத் தண்டனையை கூட நிறுத்த முடியும் என்றார் அவனோ போதகரை பார்த்து சிரித்து விட்டு இத்தனை நாட்களும் விடுவிக்காதவரா இனிமே விடுவிக்க போகிறார் என்று கூறி போதகரை துரத்தினான். துக்க முகத்துடன் போதகர் திரும்பி சென்றனர்.


இதை கவனித்து கொண்டிருந்த சிறை காவலர்கள் அவனிடம் ஓடி வந்து நல்ல ஒரு வாய்ப்பை தவறவிட்டாயே வந்தது யார் தெரியுமா...??? இந்த மாகாணத்தின் கவர்னர் அவர். உன்னை விடுவிக்க போதகர் வேடமிட்டு வந்தார். ஆனால் நீயோ அவரை உதாசினப்படுத்தி விட்டாய் என்றார்கள்.


அடுத்த நாள் காலை வந்தது தூக்கு கயிற்றின் முன்பு அவனை நிறுத்தினார்கள் . அவன் பேசினான் "நான் செய்த பாவத்துக்காக நான் சாகவில்லை, பாவ மன்னிப்பை உதாசீனபடுத்தியதற்காகவே சாகிறேன் என்றான்"


ஆம் பாவம் செய்யாத மனிதன் யாருமே இல்லை. செய்த பாவத்தை மறைக்காமல் இயேசுவிடம் மன்னிப்பு கேட்போம் . அவர் மன்னிக்க தயையுள்ளவராய் இருக்கிறார்.


நீதிமொழிகள் :28:14 "பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான். அதை அறிக்கை செய்து விட்டு விடுகிறவனோ இரக்கம் பெறுவான்.


பாவ மன்னிப்பு கேட்போமா. ......????

 
 
 

Commentaires


Featured Posts
Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Facebook
  • Twitter
  • YouTube
  • Pinterest
  • Tumblr Social Icon
  • Instagram

© 2023 by Jesus Bible Book. Proudly created with Wix.com

bottom of page